மைக்ரோசாப்ட் எக்ஸல் என்றால் என்ன ?
மைக்ரோசாப்ட் எக்ஸல் (Excel) என்பது கணிதம் சார்ந்த தகவல்களை கையாளும் ஒரு மென்பொருள் (Software) ஆகும். இது மட்டும் இல்லாமல் இன்னும் பல வகைகளில் நமக்கு இந்த எக்ஸல் மென்பொருள் உதவுகிறது.
எக்ஸல் சிறப்பம்சங்கள்
- ஃபங்ஷன்கள் பயன்படுத்தி புரோகிராம்களை எழுதிப் பயன்படுத்த முடியும்.
- சார்ட்கள் , வரைந்து கொள்ள முடியும்.
- மேக்ரோ கையாள முடியும்.
- பதிவு செய்த தகவல்களை ஏறு வரிசையிலோ அல்லது இறங்கு வரிசையிலோ முறைப்படுத்தி அடுக்க முடியும் .
- பில்ட்டர் பயன்படுத்தி தகவல்கள் பிரித்தெடுக்க முடியும் .
ஒர்க் சீட் என்றால் என்ன ?
எம்எஸ் எக்ஸல் நுழைந்தவுடன் கிடைக்கின்ற திரைக்கு ஒர்க் சீட் (Worksheet) என்று பெயர்.ஒர்க் சீட் (Worksheet)-ஐ Spread Sheet என்றும் சொல்லலாம்..
ஒர்க் சீட் (Work Sheet) நிறைய Row மற்றும் Column களால் பிரிக்கப்பட்டிருக்கும்.
Row-க்கள் 123.., என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும். Column -கள் ABC.., என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும்.எம் எஸ் எக்ஸல் ஃபைலுக்கு Spreadsheet என்று பெயர்.
எக்ஸல் செல் என்றால் என்ன ?
Row -ம் , Column -ம் இணைகின்ற செல் (Cell) என்று பெயர்.எக்ஸல் (cell) செல் ரெபெரென்ஸ் (Reference) என்றால் என்ன ?
ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு அடையாள பெயர் இருக்கும். அதாவது Cell Reference என்று சொல்லலாம்.
A என்று Column-மும், 1 என்ற Row-வும் இணைகின்ற பகுதியை A1 cell என்று சொல்லலாம்.
அதைப் போல B என்ற Column-மும், 4 என்ற Row-வும் இணைகின்ற இடத்தில் கர்சர் இருந்தால் அதற்கு B4 Cell என்று பெயர்.
ஒரு புத்தகத்தில் எப்படி நிறைய பக்கங்கள் இருக்கிறதோ, அதைப்போலவே எக்ஸல் ஃபைலில் உருவாகின்ற ஃபைல்களில் sheet1, sheet2 என்று பக்கங்களை இணைத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு sheet -லும் வெவ்வேறு தகவல்களைப் பதிவு செய்து கொள்ளலாம். தனித்தனி ஃபைலாகப் பதிவு செய்வதை விட ஒரே ஃபைலில் நிறைய sheet -களை உருவாக்கிக் கொள்ளும் வசதி எம் எஸ் எக்ஸலுக்கு உண்டு.
எக்ஸல் ஒர்க் ஷீட் (Worksheet) பக்கங்கள்
ஒரு, Worksheet-ல் குறைந்தபட்சமாக மூன்று பக்கங்கள் (Sheet) இணைக்கப்பட்டிருக்கும். அவைகள் sheet1, sheet2, sheet3 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும். தேவையானால் மேலும் சில பக்கங்களை இணைத்துக்கொள்ளலாம். தேவை இல்லையெனில் தேவையற்ற பக்கங்களை நீக்கிக் கொள்ளலாம். மேலும் sheet1, sheet2 என்று தானாகவே உருவாகியுள்ள பக்கங்களின் பெயர்களை உங்களுக்கு விருப்பம் போல மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.ஒரு புத்தகத்தில் எப்படி நிறைய பக்கங்கள் இருக்கிறதோ, அதைப்போலவே எக்ஸல் ஃபைலில் உருவாகின்ற ஃபைல்களில் sheet1, sheet2 என்று பக்கங்களை இணைத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு sheet -லும் வெவ்வேறு தகவல்களைப் பதிவு செய்து கொள்ளலாம். தனித்தனி ஃபைலாகப் பதிவு செய்வதை விட ஒரே ஃபைலில் நிறைய sheet -களை உருவாக்கிக் கொள்ளும் வசதி எம் எஸ் எக்ஸலுக்கு உண்டு.
Comments
Post a Comment